முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Vinayagar Kariya Shiddhi Maalai - விநாயகர் காரிய சித்தி மாலை


 

Kariya Shiddhi Maalai Lyrics in Tamil

விநாயகர் பெருமான் முதன்மையான கடவுள். இவரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். நிதமும் காலையில் விநாயகரை வணங்கி விட்டு தான், வேறு எந்த கடவுளையும் வணங்குவது இந்துக்களின் வழக்கம்.நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெற தினமும் காரிய சித்தி மாலை படித்து பயன் பெறுவோம்.

இந்த கார்ய சித்தி மாலையை காஷ்யப மஹரிஷி வட மொழியில் இயற்றி கச்சியப்ப முனிவர் தமிழில் மொழி பெயர்த்து நமக்கு வழங்கி உள்ளார்கள்.

காரிய சித்தி மாலை

பாடல் 1 :

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம். 

பாடல் 2 :

உலகம் முழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலகு முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். 

பாடல் 3 :

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதியை பொன் சரணம் சரணம் அடைகின்றோம். 

பாடல் 4 :

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். 

பாடல் 5 :

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன்
அந்தப் பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம். 

பாடல் 6 :

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். 

பாடல் 7 :

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன்
வளியின் எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம். 

பாடல் 8 :

பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம். 

காரிய சித்தி மாலையின் பலன்கள்

இந்த துதியைப் பாராயணம் செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது. அவை: 

  • எடுத்த காரியங்களில் வெற்றி: எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கும் முன் இந்த மாலையை உச்சரித்தால், அதில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது தடைகளை நீக்கி, செயல்கள் இனிதே நிறைவேற உதவும்.
  • மன நிம்மதி மற்றும் அமைதி: மன உளைச்சல், பதட்டம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, மன நிம்மதி பெற இந்த துதி உதவுகிறது. தொடர்ந்து பாராயணம் செய்வதன் மூலம் மனதில் அமைதி உண்டாகும்.
  • அட்டமா சித்திகள்: சதுர்த்தி போன்ற விசேஷ நாட்களில் நல்ல சிந்தனையுடன் எட்டு முறை இந்த மாலையை பாராயணம் செய்தால், அட்டமா சித்திகள் கிட்டும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோபால்சாமி துரைசாமி நாயுடு

G D NAIDU / ஜி டி நாயுடு LIFE STORY / வாழ்க்கை வரலாறு *♨️முதல் மின்சார மோட்டாரை தயாரித்த இந்தியாவின் எடிசன் என்று போற்றப்பட்ட தமிழகத்தின் அறிவியல் மாமேதை, ஜி.டி. நாயுடு நினைவு தினம் இன்று (ஜனவரி 4, 1974).* கோபால்சாமி துரைசாமி நாயுடு ( Gopalswamy Doraiswamy Naidu ) கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் மார்ச் 23, 1893ல் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார். எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர். வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார். ஒருமுறை காலி மருந்துப் புட்டி ஒன்ற...

அல்ட்டிமேட் சசி குமார்

 Ennai Partri Naan Enna Solla...